அழகிய கன்னங்கள் வேண்டுமா

Loading...

அழகிய கன்னங்கள் வேண்டுமாஉடல் தோற்றத்துக்கு ஏற்ப, அழகான தாமரைப்பூ போன்ற கன்னங்களை பெறுவது எப்படி என்பதற்கு இதோ சில பயிற்சிகள்.
உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயல்கிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை, குறைக்க அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இது போன்ற கன்னங்கள் ஏற்படுவதற்கு, ஆரோக்கியமற்ற பழக்கங்களே காரணமாகும். கன்னங்கள் உடலுக்கு ஏற்றவாறு, சரியான அளவில் இல்லை என்றால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.
ஆகவே, கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதை பின்பற்றினால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளலாம்.
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள, செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது வாயை குவித்தல். அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி, ஒரு நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும்.
இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது, 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைந்து கன்னங்கள் அழகாக உதவும். எனவே, எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.
பொதுவாக சூயிங்கம் மென்றால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூயிங்கம் மெல்லுவது முகத்துக்கு சிறந்த பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க, கன்னங்களை தூக்க வேண்டும். சிரிப்பதன் வாயிலாக, கன்னங்களை நன்கு தூக்க வேண்டும்.
உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம். வாயில் காற்றை நிரப்பி, 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply