அறுபதிலும் யூத்தா இருக்கனுமா அப்ப இந்த வேலைய மறக்காம செய்யுங்க

Loading...

அறுபதிலும் யூத்தா இருக்கனுமா அப்ப இந்த வேலைய மறக்காம செய்யுங்கவேலையில் இருந்து ரிட்டையர்ட் ஆனாலே சமூகத்தில் அந்தஸ்து ,மதிப்பு வீட்டில் மரியாதை போய்விட்டத்தாக ஒரு நினைப்பு ஆல் மூத்த இளைஞர்களுக்கு அதான் அறுபது வயது கடந்தவர்களுக்கு வந்துவிடுகிறது. இவர்கள்தான் இந்த கட்டுரையை முக்கியமாய் படிக்க வேண்டும் கொஞ்சம் படிங்க பாஸ்!
யு.எஸ்-ல இருக்கிற ஒரேகன் பல்கலைக்கழகத்தில் (Oregon State University) நடந்த ஆய்வில், ரிட்டையர்ட் ஆனாலும் உடலையும் மனதையும் பிஸியாக வைத்துக் கொள்பவர்களை காலன் அவ்வளவு எளிதாக நெருங்குவதில்லை என கண்டறியபட்டுள்ளது. அறுபது வயதிலும் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களோடு மகிழ்ச்சியாய் அதிக ஆயுளோடு வாழ்கிறார்கள் என கூறுகின்றனர்.
தலைமை ஆராய்ச்சியாளர் “செங்காய் வு” என்பவர் கடந்த 1992 வருடத்திலிருந்து 2010 வரை உள்ள ரிட்டையர்ட் ஆன மக்கள் சுமார் 12000 பேரிடம் ஆராய்ச்சி செய்திருக்கிறார். பின்னர் அவர்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்த 2956 பேரிடம் மட்டும் மிக கவனமாய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இதில் ரிட்டையர்ட் ஆனாலும் மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொண்டிருந்தவர்கள் மூன்றில் 2பங்கும், ரிட்டையர்ட் ஆனதும் மனத்தளர்ச்சியால், உடல் சோர்ந்து உட்கார்ந்தவர்கள் மூன்றில் ஒரு பங்கும் இருந்திருக்கின்றனர்.
அறுபது வயதை கடந்தாலும் உற்சாகமாக வேலை செய்து கொண்டு உள்ளவர்களின் வாழ் நாள் நீடித்துள்ளது மற்றும் மனத்தளர்ச்சியில் இருந்தவர்களின் ஆயுட்காலம் ரிட்டயர்ட் ஆனபின் குறைந்துள்ளதாக இந்த 18 ஆண்டுகால ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பல் போனால் சொல் போச்சு என்பது அந்த காலம். பல் போனாலும் பல் செட் வைத்துக் கொள்வோம் என்பது இந்த காலம். ஆகவே அறுபதிலும் மனதை இருபதை போல் வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனம் போல் வாழ்க்கை கிட்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply