அறுசுவையும் மருத்துவக்குணங்களும்

Loading...

அறுசுவையும் மருத்துவக்குணங்களும்
துவர்ப்பு

இரத்தப்போக்கை குறைத்து இரத்தத்தை பெருக்கின்றது.வயிற்றுப்போக்கை சரி செய்ய வல்லது.வாழைக்காய்,மாதுளை, மாவடு, மஞ்சல் , அவரை , அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


இனிப்பு

தசையை வளர்க்கின்றது.மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூ.டியது .இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு , சோர்வு , அதிக தூக்கம் , இருமல் , உடல் எடை கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கூடிய உருளைக்கிழங்கு , கரட் , அரிசி , கோதுமை , கரும்பு போன்றவை தண்டு வகைகளில் அதிகமாக உள்ளது.


புளிப்பு

கொழுப்பை வழங்கிறது. பசியுணர்வைத் தூண்டும் , உணர்வு நரம்புகளை வலுப்படையச்செய்கிறது.இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும் .


கசப்பு

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும் , அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயற்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல் , அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச்செய்கின்றது. இந்த சுவை அதிகமானாலும் பார்த்துக்கொள்ளவேண்டும். பாகற்காய் , சுண்டக்காய் , வெ.பூண்டு ,எள் ,வேப்பம்பூ , ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாக உள்ளது.


கார்ப்பு

எலும்பினை வளார்க்கின்றது. இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண் , வாய், போன்றவற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.


உவர்ப்பு

உமிழ் நீரை சுரக்கச் செய்கின்றது. அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்னடத்தினாலே போதுமானது.அத்தோடு வா-ழைக்காய் ,மாவடு ,அத்திக்காய் போன்றவற்றில் உண்டு. உவர்ப்பு அதிகமானால் வாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே அனைவரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால் , ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply