அப்போலோ மீன் வறுவல்

Loading...

அப்போலோ மீன் வறுவல்
தேவையான பொருட்கள் :

விரால் மீன் – –250 கிராம்
நறுக்கிய பூண்டு –1 தே.க
நறுக்கிய இஞ்சி –1 தே.க
பச்சை மிளகாய் –3
(நீளமாக வெட்டிக் கொள்ளவும்)
மிளகாய் பேஸ்ட் –1 மே.க
மல்லித் தூள் – 1 தே.க
சோயா ேசாஸ் –1 தே.க
தயிர் –¼ கப்
மிளகுத் தூள் –½ தே.க
கறிவேப்பிலை –சிறிது
உப்பு –தே. அளவு
எண்ணெய் –தே. அளவு


ஊற வைப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் –1 தே.க
சோள மா –1 மே.க
கோதுமை மா – 1 மே.க
எலுமிச்சை சாறு –1 மே.க
மிளகாய் தூள்–1 தே.க
மஞ்சள் தூள் –¼ தே.க
முட்டை – 1
உப்பு –சிறிது


செய்முறை:

முதலில் மீனின் சதைப்­பகுதியை சற்று பெரிய துண்டு­களாக்கி, நீரில் கழுவி தனியாக வைத்துக்கொள்­ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்­பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்­கவும்.

பின் அதில் மிளகாய் பேஸ்ட், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மல்­லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து அத்துடன் சோயா ேசாஸ் மற்றும் தயிர் சேர்த்து கிளறி, அதோடு மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதோடு பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி­னால்,

அப்போலோ மீன் வறு­வல் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply