அப்கிரேடு செய்யப்பட்ட புதிய வாட்ஸ்அப் அப்ளிகேசன்

Loading...

அப்கிரேடு செய்யப்பட்ட புதிய வாட்ஸ்அப் அப்ளிகேசன்விண்டோஸ் போன்களின் பயன்பாடு உலக அளவில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏனெனில் இந்த விண்டோஸ் போன்களில் ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன. அந்த வகையில் விண்டோஸ் போன்களில் இருக்கும் வாட்ஸ்அப் என்ற அப்ளிகேசன் அப்கிரேட் செய்யப்பட்டு அதன் புதிய வாட்ஸ்அப் வெர்சன் 2.8 களம் இறங்க இருக்கிறது.

இந்த செய்தியானது விண்டோஸ் போன்களைப் பயன்படுத்துவோருக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும். முதலில் இந்த அப்க்ரேட் வாட்ஸ்அப் அப்ளிகேசன் 0.99 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுவதாக வதந்திகள் கிளம்பின. ஆனால் இப்போது இந்த அப்ளிகேசனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

அதாவது முதல் ஒரு வருடத்திற்கு இந்த அப்ளிகேசனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஒரு வருடம் முடிந்தபின் வாடிக்கையாளர்கள் 0.99 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும்.

புதிய அப்கிரேடுடன் வந்திருக்கும் இந்த அப்ளிகேசன் ஏராளமான வசதிகளுடன் வருகிறது. இந்த புதிய அப்ளிகேசனில் உள்ள டூல்பார் 3 வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதாவது சேர்ச், ஸ்டேட்டஸ் மற்றும் கிரேயேட் குரூப் போன்ற வசதிகளை இதன் டூல்பாரில் பார்க்கலாம்.

மேலும் தகவல் பரிமாற்றம் செய்யும் போது இந்த புதிய அப்ளிகேசன் ஏராளமான வசதிகளை வழங்குகிறது. அதாவது சேட் செய்யும் போது அனிமேசனை அனுபவிக்க முடியும். அதோடு இந்த புதிய அப்ளிகேசன் மிக விரைவாக இயங்குகிறது. அதோடு இந்த புதிய அப்ளிகேசனை இயக்குவதற்கும் மிக எளிதாக இருக்கிறது.

ஆன்ட்ராய்டு, ப்ளாக்பெரி, விண்டோஸ் போன் மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களில் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ்அப் மெசஞ்சர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த அப்ளிகேசன் மூலம் 3ஜி மற்றும் ஆன்ட்ராய்டு வசதிகள் மூலம் செய்திகளை அனுப்பலாம் மற்றும் பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply