அதி கூடிய சேமிப்பு கொள்ளவினைக் கொண்ட SSD கார்ட் அறிமுகம்

Loading...

அதி கூடிய சேமிப்பு கொள்ளவினைக் கொண்ட SSD கார்ட் அறிமுகம்தரவுகளை நிரந்தரமாகவும், அதிகளவிலும் சேமிப்பதற்கு துணைச் சேமிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றிற்கிடையிலான ஒப்பீட்டில் வன்றட்டுக்களிலே (Hard Disk) அதிக தரவுகள் சேமிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

ஆனாலும் வன்றட்டுக்களுக்கு பதிலாக SSD கார்ட்கள் பயன்படுத்தப்படுவது தற்போது அதிகரித்து வருகின்றது.

வன்றட்டுக்களுடன் ஒப்பிடுகையில் SSD கார்ட்கள் விரைவாக தரவுகளை கடத்தக்கூடியதாக இருப்பதுடன், லேப்டொப் போன்ற கணினிகளில் மின்கலங்களின் நீண்ட நேரச் செயற்பாட்டிற்கு உத்தரவாதம் உடையதாக காணப்படுகின்றது.

ஆனாலும் SSD கார்ட்கள் வன்றட்டுக்களுடன் ஒப்பிடுகையில் விலை அதிகமாகும்.

இதனால் குறைந்த சேமிப்பு கொள்ளவினை உடைய SSD கார்ட்களே இதுவரை உருவாக்கப்பட்டு வந்தது.

ஆனால் முதன் முறையாக Crucial MX300 எனும் 750GB சேமிப்பு கொள்ளவு உடைய SSD கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தரவுகளை 530 MB/s எனும் வேகத்தில் வாசிக்கக்கூடியதாகவும், 510 MB/s வேகத்தில் பதியக்கூடியதாகவும் இருக்கின்றது. இதன் விலையானது 208 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply