அதிக வினைத்திறன் வாய்ந்த கமெராவுடன் அறிமுகமாகும் HTC 10

Loading...

அதிக வினைத்திறன் வாய்ந்த கமெராவுடன் அறிமுகமாகும் HTC 10அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் HTC நிறுவனம் விரைவில் HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியில் முதன் முறையாக எந்தவொரு கைப்பேசியிலும் இதுவரை இல்லாத அளவு அதிக வினைத்திறன் வாய்ந்த கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன் ஏனைய சிறப்பம்சங்களாக 5.1 அங்குல அளவுடைய QHD தொடுதிரை, Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

இவை தவிர பிரதான கமெரா 12 மெகாபிக்சல்களை உடையதாகவும், செல்பி கமெரா 5 மெகாபிக்சல்களை உடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் Android Marshmallow இயங்குதளத்தினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள், அறிமுகம் செய்யப்படும் திகதி போன்றவற்றினை அறிவிக்கும் மாநாடு ஒன்று எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply