அடுத்த மாதம் 14ந் தேதி விற்பனைக்கு வரும் யமஹாவின் ரே ஸ்கூட்டர்

Loading...

அடுத்த மாதம் 14ந் தேதி விற்பனைக்கு வரும் யமஹாவின் ரே ஸ்கூட்டர்அடுத்த மாதம் 14ந் தேதி யமஹா ரே ஸ்கூட்டர் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரே ஸ்கூட்டர் மூலம் முதன்முறையாக இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விரைவில் அடியெடுத்து வைக்க உள்ளது யமஹா. இதில் முதல் மாடலாக ரே என்ற புதிய 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.

டெல்லி கண்காட்சியிலேயே இந்த ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் சாலை ஓட்ட சோதனைகள் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் 14ந் தேதி முதல் ரே ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு யமஹா திட்டமிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

யமஹா ரே ஸ்கூட்டர் யுவதிகளை மட்டுமின்றி இளைஞர்களையும் வெகுவாக கவரும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டில் வெகு சீக்கிரமே முக்கிய இடத்தை பிடித்துவிடும் என்று தெரிகிறது. ரே ஸ்கூட்டருக்கு சமீபத்தில் முன்பதிவை யமஹா துவங்கியது நினைவிருக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply