Xbox Music மற்றும் Xbox SmartGlass இனை அறிமுகப்படுத்துகின்றது மைக்ரோசொப்ற்

Loading...

Xbox Music மற்றும் Xbox SmartGlass இனை அறிமுகப்படுத்துகின்றது மைக்ரோசொப்ற்மைக்ரோசொப்ற்றினால் தனது E-3 ஊடக மாநாட்டில் இரண்டு புதிய மென்பொருட்கள்பற்றி வெளியிடப்பட்டது. Xbox Music இசை மென்பொருளானது Spotify இனையொத்ததாகக் காணப்படும். அத்துடன் வின்டோஸ் உள்ள கணினிகளிலும் கையடக்கத் தொலைபேசிகளிலும் இது பயன்படுத்தப்படும்.

இதன் வெளியீடு எப்போ என்பதை மைக்ரோசொப்ற் கூறவில்லை. ஆனால் தனது முந்தைய சேவையான Zune இனை இது மறுபதிப்புச் செய்யுமெனப்படுகின்றது.

இதன்மூலம் பாடல்களை வரிசைப்படுத்தி தாங்கள் கேட்பதையே மற்றவர்களையும் கேட்கவைக்கும் அதே Spotify இன் வேலையையும் இது செய்யும். இருப்பினும் இதன் தனித்துவமான சேவைகள்பற்றி வரும் வாரங்களில் மைக்ரோசொப்ற் வெளியிடுமென அந்நிறுவனம் கூறியுள்ளது.

Xbox SmartGlass என்ற மென்பொருளையும் இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இது பயனாளர்களைத் தமது Xbox உடனும் தொலைக்காட்சித் திரையுடனும் தமது கணினிகளையும் கையடக்கத் தொலைபேசிகளையும் பயன்படுத்தித் தொடர்புறவைக்கின்றது.

இதன்மூலம் நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே உங்களது Xbox இற்கும் மாற்றமுடியும்.
இதிலுள்ள நல்ல விடயமென்னவெனில் ஒரு தொலைக்காட்சியில் நீங்கள் அதன் நிகழ்ச்சிகளையும் Xbox இன் விளையாட்டுக்களையும் மாறி மாறித் தொடரமுடியும். இவ்விரண்டிற்குமிடைப்பட்ட தொடர்பானது Nintendo’s Wii U இனை ஒத்ததாகும். இது கையடக்கக் கணினி வகைக் கட்டுப்படுத்தியுடன் வருகின்றது.

அத்துடன் Internet Explorer ஆனது Xbox இற்கும் வருமென்றும் Xbox SmartGlass மற்றும் அதன் கமெராவிற்குப் பொருந்தக்கூடியவாறும் வருமென்றும் மைக்ரோசொப்ற் தெரிவித்தது.

Loading...
Rates : 0
VTST BN