USB தொழில்நுட்​பத்தில் அமைந்த புதிய கைரேகை வாசிப்பான்

Loading...

USB தொழில்நுட்​பத்தில் அமைந்த புதிய கைரேகை வாசிப்பான்கணணி தொடர்பான பாதுகாப்பு செயன் முறைகளில் கைரேகை வாசிப்பானும்(finger print reader) மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.

இத் தொழில்நுட்பமானது ஒவ்வொரு பாவனையாளர்களினதும் வெவ்வேறுபட்ட கைவிரல் அடையாளங்களைக் கொண்டு காணப்படுவதனால் அதி உச்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதுடன் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

தற்போது கைரேகை வாசிப்பான்கள் கணணிகளில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய வகையில் மிகச்சிறிய அளவுடையதாகவும், USB இணைப்பியைக் கொண்டுள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

15 x 19 x 13 mm அளவுடைய இச்சாதனமானது பாதுகாப்பான இணையப் பாவனை, கடவுச்சொல் முகாமைத்துவம், கோப்பு பூட்டுக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும்.

இவற்றின் அறிமுகப் பெறுமதியானது 10 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply