Nokia 10,000 பணியாளர்களை பணிநீக்குகின்றது!

Loading...

Nokia 10,000 பணியாளர்களை பணிநீக்குகின்றதுவியாழனன்று நொக்கியா நிறுவன அறிவிப்பின்படி அடுத்த வருட இறுதியில் 10,000 பணியாளர்களை உலகளாவிய ரீதியில் பணிநீக்கம் செய்யப்போவதாகக் கூறியுள்ளது.

பின்லாந்தின் கைத்தொலைபேசி நிறுவனத்தின் விலைகுறைப்பு நிகழ்ச்சிநிரலின் பகுதியாகவே இப்பணிநீக்கம் இடம்பெறுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனையில் போட்டி அதிகரித்த நிலையில் அது தனது இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் நிதிநிலையில் பாதிப்பேற்படுமென்று எச்சரிக்கப்பட்ட காரணத்தினாலேயே இந்த முடிவை எடுத்துள்ளது.

நொக்கியாவிற்கான அமெரிக்கப் பங்கு 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முன்புகூட இவ்வருடம் இதன் பங்குகள் 42 வீதமாகக் குறைந்திருந்தது.

இந்தத் திட்டமிட்ட பணிநீக்கங்கள் தமது நீண்டகாலப் போட்டியிடும் வலுவை உறுதிப்படுத்தும் நடவடிக்கையே என்றார் நொக்கியாவின் நிறுவுனர் ஸ்ரிபன் இலொப்.

இதன் இன்னொரு நிதிக்குறைப்பு நடவடிக்கையாக ஜேர்மனியிலும் கனடாவிலும் இடம்பெறும் ஆய்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் நிறுத்தப்போகின்றது.

நொக்கியா தனது Lumia என்ற கைத்தொலைபேசியின் அபிவிருத்தியிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது. இக்கைத்தொலைபேசியில் மைக்ரொசொப்ரின் Fortune 500 என்ற Operating System உள்ளது. இந்த OSஇன் பயன்பாடானது, கூகிளுடனும் அப்பிளுடனும் போட்டியிடும் நொக்கியாவின் முயற்சியாகும்.

உலகின் பெறுமதிமிக்க நிறுவனமான அப்பிளிற்கெதிராக மேற்கொள்ளும் சவாலைவிடவும் கடந்த மாதம் 12.5பில். டொலர்கள் மூலம் மோட்டரோலா நிறுவனத்தினை வாங்கியிருந்த கூகிளின் செயற்பாடு இதற்குப் பெரும் போட்டியாக உள்ளது.

இவ்வருட முதன் காலாண்டில் நொக்கியா உலகின் முதல்தர கையடக்கத் தொலைபேசி என்ற பட்டத்தை இழந்திருந்தது. இது 14 வருடங்கள் போராடிய கொரியாவின் சாம்சங்கினால் தட்டிச்செல்லப்பட்டுள்ளது. எனினும் சாம்சங் நிறுவனமும் ஏப்ரலில் சற்று வீழ்ச்சியடைந்திருந்ததுதானென கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

எனினும் இந்த இழப்பு நொக்கியாவினதைப் போல இருக்கவில்லையென்று கூறலாம். நொக்கியா சில வருடங்களாகவே தனது புகழை இழந்துவந்தது. 2007இல் அப்பிளின் iPhone முதன்முதலாக வெளியிடப்பட்ட பின்னர் 30 வீதத்தால் இதன் கடல்கடந்த கப்பல் விற்பனைகளும் குறைந்திருந்தது.

முதல் நிலையிலிருந்த நொக்கியா தற்போது 3ம் இடத்தில் உள்ளது.

எனினும் இந்தத் தோல்விகளை நொக்கியா மட்டும் எதிர்கொள்ளவில்லை எனலாம். இவ்வாறான பாதிப்பினால் Blackberry இன் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் தனது பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply