LinkedIn இணையத்தளத்தின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு

Loading...

LinkedIn இணையத்தளத்தின் கடவுச்சொல்லை மாற்றுவதற்குLinkedIn என்பது தொழில்முறை சமூக வலையமைப்பு(Professional Social Networking) தளமாகும், இதன் மூலம் தொழில் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரபலமான இந்த தளத்தின் சுமார் ஆறரை மில்லியன் கடவுச்சொற்களை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடவுச்சொற்களுக்கான மின்னஞ்சல்களை அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் அந்த தகவல்கள் அவர்களிடம் உள்ளது.

அவைகள் LinkedIn தளத்தின் கடவுச்சொற்கள் தான் என அந்த தளம் உறுதி செய்து மன்னிப்பும் கேட்டுள்ளது.

எனவே LinkedIn தளத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக கடவுச்சொல்லை மாற்ற நினைப்பார்கள்.

இதற்கு முதலில் Password என்பதற்கு அருகில் உள்ள Change என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதன் பிறகு உங்கள் பழைய கடவுச்சொல்லையும், புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் கொடுத்து Change Password என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் உங்களது கணக்கிற்கு புதிய கடவுச்சொல் மாறி விடும்

Loading...
Rates : 0
VTST BN