HTC 10 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது | Tamil Serial Today Org

HTC 10 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Loading...

HTC 10 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானதுமுதற்தர ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HTC ஆனது HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது 15ம் திகதியே அறிமுகம் செய்யப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது 5.1 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர தலா 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, Android 6.0 Marshmallow இயங்குதளம், 3000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN