Historyஐ அழிக்கும் கணினியாகப் பயன்படும் புதிய memory stick!

Loading...

Historyஐ அழிக்கும் கணினியாகப் பயன்படும் புதிய memory stick!ஒரு தனிநபர் கணினியாகவும் அதேவேளையில் நினைவகமாகவும் செயற்படும் புதியதொரு memory stick உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஓர் உளவாளியாகவோ முக்கிய நபராகவோ இருந்தால் நீங்கள் பார்க்கும் விடயங்கள் பற்றிய தடங்களை விட்டுச்செல்லாமல் கணினியைப் பயன்படுத்தமுடியும்.

இந்த மென்பொருளடங்கிய நினைவகத்தில் நீங்கள் உங்களது சொந்தக் கணினியையே கொண்டுசெல்லமுடியும். இதனை நீங்கள் சட்டைப்பைக்குள் கொண்டுசெல்லலாம். அத்துடன் நீங்கள் பார்த்துமுடித்த பின்னரும் ஒருவர் அதனைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

எனினும் தொழினுட்பரீதியாகக் கூறினால் நீங்கள் முழுமையானதொரு கணினியைக் காவித்திரியமாட்டீர்கள். பதிலாக ஒரு சாதாரண USB இனையே வைத்திருப்பீர்கள்.

ஆனால் இதற்குள் வின்டோஸ் போன்ற முழு செயற்பாட்டுத் தொகுதியொன்று உள்ளடக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு கணினியில் நீங்கள் செருகும்போது அது உங்களது Tails எனப்படும் தனிப்பட்ட செற்-அப்களுடன் restart ஆகும்.

இதன்பின்னர் நீங்கள் உங்களது தேவைகளை முடித்தபின் மீண்டும் நினைவகத்தினை அகற்றிவிட்டுச் செல்லலாம். யாரும் கணினியைப் பயன்படுத்தினார்களென்றே தெரியவராது.

Tails மென்பொருளானது லினக்ஸ் செயற்பாட்டுத் தொகுதியைப் பயன்படுத்தினாலும் வின்டோஸ் XP இனைப் போன்ற செயற்பாடுகளைச் செய்யும்.

ஒரு பயனாளர் செய்யவேண்டியதெல்லாம் Tails மென்பொருளைத் தமது நினைவகத்திற்குள் பதிவதுதான். இதன்மூலம் cookies களோ Recyle Bin இற்குச் சென்ற எந்தவொரு கோவையும் எங்கும் தென்படாது.

எனினும் இந்தத் தொழினுட்பத்தினால் நன்மை இருக்கும் அதேவேளையில் தீமையும் காணப்படுவதாகக் குறைகூறப்படுகின்றது. ஒருவரால் மற்றவர்களின் கணினிகளில் இதன்மூலம் சட்டவிரோதமான செயல்களையும் செய்யமுடியுமென்றும் விமர்சிக்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply