Facebook தொழினுட்பப் பிரிவுத் தலைவர் பதவிவிலகல்! | Tamil Serial Today Org

Facebook தொழினுட்பப் பிரிவுத் தலைவர் பதவிவிலகல்!

Loading...

Facebook தொழினுட்பப் பிரிவுத் தலைவர் பதவிவிலகல்!Facebook இன் தொழிநுட்பப் பிரிவுத் தலைவர் Bret Taylor தான் புதியதொரு நிறுவனமொன்றை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதால் Facebook நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் Nasdaq பங்குச்சந்தையில் Facebookஇன் பகுதியொன்று மிக எழுச்சியடைந்திருந்தது. இதனால் அதன் பெரும்பாலான பணியாளர்கள் ஓரிரவிலேயே லட்சாதிபதிகளாயினர்.

அப்போது அப்பணியாளர்களில் பலர் வேறிடங்களுக்கு மாறலாமென அவதானிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

எனினும் அதன்பின்னர் Facebookஇன் பங்குகள் தொடர்ச்சியாக விழத்தொடங்கி 38 டொலரிலிருந்து 30 டொலர்களாகக் (20 வீதத்திற்கு) குறைந்திருந்தது.

இதனால் பங்குதாரர்கள் அந்நிறுவனத்தையிட்டு அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர். அத்துடன் Facebookஇன் வளர்ச்சியை அதன் எழுச்சிக்கு முன்னதாக அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெரிவிக்கவில்லையென்றும் இவர்கள் குறைகூறினர்.

தற்போது விலகிச்செல்லும் திரு.ரெய்லர் தான் Facebook நிறுவனத்திலிருந்து விலகுவதையிட்டுக் கவலையடைவதாகவும் எனினும் புதியதொரு நிறுவனத்தினைத் தொடங்குவதையிட்டுத் தான் ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான மாற்றம் ஒருபோதும் இலகுவாக இருக்காது. எனினும் தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தான் Facebook இன் அண்மைய அபிவிருத்திகளான Facebook கமெரா மற்றும் அப்பிள் உற்பத்திகளுடன் இணைந்தமை போன்ற செயற்பாடுகளையிட்டுப் பெருமைப்படுவதாகவும் திரு.ரெய்லர் தெரிவித்தார்.

இவரது விலகலையிட்டு Facebook நிறுவுநர் மார்க் சக்கர்பேர்க் தெரிவிக்கையில் தான் திரு. ரெய்லருடன் பணியாற்றியதையிட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் Facebook இற்காகச் செய்த விடயங்களிற்காக நன்றியுடையவனாக இருப்பதாகவும் அவரும் அவரது குழுவினரும் உருவாக்கிய விடயங்களுக்காகப் பெருமையடைவதாகவும் கூறினார்.

Loading...
Rates : 0
VTST BN