Axis Browser: யாகூவின் புத்தம் புதிய உலாவி

Axis Browser யாகூவின் புத்தம் புதிய உலாவிதன் தேடல் சாதனத்தில் கூடுதல் வசதியாக, தன் உலாவி ஒன்றை ஆக்ஸிஸ் என்ற பெயரில் யாஹூ வழங்கியுள்ளது.

இது ஒரு தனி உலாவி இல்லை, ஏற்கனவே பயனாளர் பயன்படுத்தும் உலாவியில் ஒரு Plug-in சாதனமாய் இயங்குகிறது.

ஐபேட் மற்றும் ஐபோனில் பயன்படுத்த தனிப்பதிப்பு தரப்படுகிறது. குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் சபாரி உலாவிகளுக்கான ஆக்ஸில் ப்ளக் இன் கிடைக்கிறது.

இது என்னவெனப் பார்க்கலாம்? பயனாளர் ஒருவர், தேடலை மேற்கொள்கையில் தேடல் முடிவுகள் பட்டியல்களாகப் பக்கம் பக்கமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பயனாளர் மீண்டும் ஒரு தேடலை நடத்தித் தான் விரும்பும் தளத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறார்.

இந்த அலைச்சல் ஆக்ஸிஸ் உலாவியில் இல்லை. தேடல் முடிவுகள், அந்த தளங்களின் முன் பக்கங்களின் Thumbnail படங்களாக, ஒரே திரையில் நெட்டு வரிசையில் அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகின்றன.

இவற்றைப் பார்த்து தான் தேடிய தளத்தினைக் கண்டறிந்து கிளிக் செய்து ஒருவர் எளிதாகச் செல்ல முடியும். எனவே தேடலுக்கான கேள்வி, முடிவுகள், தளம் செல்லல் என மூன்று எளிய நிலைகளில் பயனாளர் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்.

Loading...
Rates : 0
VTST BN