3 விண்வெளி வீரர்களுடன் 193 நாட்களுக்குப் பின்பு ரஷிய விண்கலம் பத்திரமாக தரை இறங்கியது

Loading...

3 விண்வெளி வீரர்களுடன் 193 நாட்களுக்குப் பின்பு ரஷிய விண்கலம் பத்திரமாக தரை இறங்கியது!அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் சோயுஷ் டி.எம்.ஏ. -03 எம் என்ற விண்கலத்தின் மூலம் ரஷியாவைச் சேர்ந்த ஒலேக் கொனென்கோ, டொனால்டு பெட்டிட், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ குயி பெர்ஸ் ஆகிய 3 வீரர்கள் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி கஜகஸ்தானில் உள்ள ரஷியாவின் பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து இவர்கள் புறப்பட்டனர். 2 நாள் பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை அடைந்தனர்.

அங்கு இவர்கள் ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் 193 நாட்களுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டனர். இந்த நிலையில் இவர்களது சோயுஷ் விண்கலம் மாஸ்கோ நேரப்படி நேற்று இரவு 12.14 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 3 வீரர்களும் பத்திரமாக திரும்பினார்கள். சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் ஜோ அகாபா, கென்னடி படால்கா, செர்ஜி ரெவின் ஆகிய 3 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் வருகிற 14-ந்தேதி பூமிக்கு திரும்புகின்றனர்.

அவர்களை தொடர்ந்து அமெரிக்கா நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் யூரி மலர் சென்கோ (ரஷியா) அகினோ ஹோஷிட் (ஜப்பான்) ஆகிய 3 பேரும் சோயுஷ் விண்கலம் மூலம் புறப்பட்டு செல்கின்றனர். அங்கு வருகிற நவம்பர் மாதம் வரை தங்கி பணிபுரிகின்றனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply