2012 ஆப்பிளின் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப் களமிறங்குகிறது…

Loading...

2012 ஆப்பிளின் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப் களமிறங்குகிறது…ஆப்பிள் 2012 ஆண்டுக்கான தனது புதிய மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்புகளை விரைவில் களமிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டு வந்த மேக்புக் ப்ரோ மாடல்களில் இல்லாத பல புதிய தொழில் நுட்பங்களை இந்த ஆண்டு வெளிவர இருக்கும் புதிய மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்புகளில் களமிறக்க இருக்கிறது ஆப்பிள்.

இந்த புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்புகள் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் ஆகிய அளவுகளில் வருகின்றன. 15 இன்ச் லேப்டாப் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்புகளின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இவை யுஎஸ்பி 3.0 மற்றும் ஐவி ப்ராசஸர்களுடன் வருகின்றன.

கடந்த வருடம் வந்த மேக்புக்குளில் இருந்த இன்டல் க்ராபிக்ஸ் 3000 மற்றும் எஎம்டி ரேடியோன் ப்ராசஸர்களுக்குப் பதிலாக இந்த வருடம் வரும் மேக்புக்குகளில் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 மற்றும் என்விடியா கெப்லர் ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் க்ராபிக்ஸ் ஆகியவை வருகின்றன. அதனால் புதிய மேக்புக்கின் செயல் திறன் அதிரடியாக இருக்கும் என நம்பலாம்.

புதிய 15 இன்ச் மேக்புக் 16ஜிபி மெமரியுடன் வருகிறது. அதோடு 768 ஜிபி எஸ்எஸ்டியைக் கொண்டிருக்கிறது. ஆனால் புதிய 13 இன்ச் லேப்டாப் 8ஜிபி மெமரியையும், 512 எஸ்எஸ்டியையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த 13 இன்ச் மாடல் 2.9 ஜிஹெர்ட்ஸ் ஐவி ப்ரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருகிறது. அதோடு எச்டி க்ராபிகஸ் 4000யும் இந்த புதிய லேப்டாப் கொண்டிருக்கிறது.

புதிதாக வரும் இந்த மேக்புக் ப்ரோ லேப்டாப்புகள் ஆப்பிளின் வர்த்தகத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply