10 வருடங்களுக்கு முன்னர் செல்பேசிகளும் நாமும்.. ஓர் சுவாரசிய தகவல்

Loading...

10 வருடங்களுக்கு முன்னர் செல்பேசிகளும் நாமும்..  ஓர் சுவாரசிய தகவல்.10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோன்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போக வேண்டியிருந்தது. * உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை அட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம். * அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது, ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது, டாப்-அப் கிடையாது. * தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாக அனுப்பினோம். * அடிக்கடி பேட்டரியை கழட்டியது கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது. * 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும் குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட் பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர் போடப்பட்டிருந்தது. * Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு சட்டைப்பையில் செல்போனை வைத்திருந்தார்கள். * பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால் மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். * 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக செல்போன் வைத்திருந்தார்கள். * வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின் செல்போனை தொடவே பயந்தார்கள். * மிஸ்டு கால் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம். * மழையில் நனைந்த செல்போனை மொட்டை மாடியில் காய வைத்து நமக்கு நாமே சரிசெய்து கொண்டோம். * செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு எப்படி போன் செய்வதென்று தெரியாமல் படித்தவர்களிடம்கேட்டோம். * Snake Xania மற்றும் Carrom Board கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம். * அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல் வைத்திருந்தோம். வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. ஆனால் இன்று?

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply