ரவை பாயசம்

Loading...

ரவை பாயசம்

தேவையானவை :
ரவை 1 பிடி, பயற்றம் பருப்பு 1/2 கரண்டி, வெல்லம் எலுமிச்சையளவு, பால் 2 கரண்டி, ஏலக்காய் 2, முந்திரிப்பருப்பு 5, கேசரிப்பவுடர் 1 சிட்டிகை, நெய் 3 ஸ்பூன்

செய்முறை :
வெண்கலத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுத்துக் கொண்டு அதில் 1/2 ஆழாக்கு தண்ணீரை ஊற்றி விடாமல் கிளறி, பயற்றம் பருப்பையும் போடவும். இரண்டும் நன்கு வெந்தவுடன் வெல்லத்தை நறுக்கி சேர்க்கவும். வெல்ல வாசனை போக கொதித்தவுடன் கேசரிப்பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இதில் வெல்லத்திற்கு பதிலாக இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்தும் தயாரிக்கலாம். பயற்றம் பருப்பு சேர்க்கத் தேவையில்லை.

Loading...
Rates : 0
VTST BN