குறட்டைக்கு இனி பாய் பாய் வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்

Loading...

குறட்டைக்கு இனி பாய் பாய்  வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்குறட்டை என்பது பாரிய நோய் இல்லை எனினும் இது பலரது தூக்கத்தை தொலைக்கக்கூடியது.
இதனால் விவாகரத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் கூட அறிந்திருப்பீர்கள்.

குறட்டையினை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் அவை நூறு சதவீதம் வெற்றியளிப்பதில்லை.

ஆனால் தற்போது இதற்கான மாற்றுவழி ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது குறட்டையை நிறுத்த முடியாவிட்டாலும் அதன் மூலம் வெளியேறும் சத்தத்தினை குறைப்பதற்கு ஒட்டும் பட்டை (Patch) ஒன்றினை அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த பட்டையினை தூக்கத்திற்கு செல்லும்போது மூக்கின் மீது ஒட்டினால் போதும் நாம் மட்டுமின்றி நம்மை சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாக தூங்க முடியும்.

Loading...
Rates : 0
VTST BN