கவர்ச்சிகரமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்

Loading...

கவர்ச்சிகரமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.

2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா-202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம். கவர்ச்சிகரமான இந்த மொபைல் 10 எம்பி வரை இன்டர்னல் மெமரியினை கொண்டது. ஆஷா-202 மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும்.

ஆஷா-202 மொபைலில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள முடியும் என்பதால் போதுமான தகவல்களை இதில் எளிதாக ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். இந்த ஆஷா-202 மொபைல் டியூவல் சிம் வசதியினை கொண்ட மொபைல்.

ஆஷா-302 மொபைல் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பினை கொண்ட இந்த மொபைல், ஆஷா-202 மொபைலை போல 2.4 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். 3.2 மெகா பிக்ஸல் கேமரா வசதியின் மூலம் இந்த மொபைலில் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் கேமரா வசதியினை பெறலாம்.

நோக்கியா ஆஷா-202 மொபைல் ரூ. 4,149 விலையினையும், ஆஷா-302 மொபைல் ரூ. 6,191

Loading...
Rates : 0
VTST BN