ஒரு பொருளைத் தொலைத்துவிட்டீர்களா? கண்டுபிடிக்கின்றது Xbox!

Loading...

ஒரு பொருளைத் தொலைத்துவிட்டீர்களா கண்டுபிடிக்கின்றது Xbox!தவறுதலாக எதையாவது தொலைத்துவிட்டு நாங்கள் எவ்வளவு பாடுபடுகின்றோமென்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் Xbox விளையாட்டுக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவியினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியுமென்பதுதான் எமக்கு நிம்மதி தரும் விடயமாக உள்ளது.

Kinsight என்றழைக்கப்படும் இத்தொகுதியானது கமெராவொன்றினைப் பயன்படுத்தி வீட்டுப்பொருட்களின் நகர்வினைக் கண்காணிக்கின்றது.

வீட்டிற்கான Google என்று அழைக்கப்படும் இந்தத் தொகுதியானது ஒரு தொகுதி உணரிகள் பொருத்தப்பட்ட சிறப்புக் கணினி நிகழ்ச்சிநிரலின்மூலம் தொலைந்த பொருட்களின் அமைவிடத்தினைத் தேட உதவுகின்றது.

இதன்மூலம் சீப்பு, குவளை, திறப்புகள், சமையல் பொருட்கள் உட்பட 48 பொருட்கள் கண்டுபிடிக்கப்படலாம். பொதுவாகக் காணாமல் போகும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பைகள் போன்றவற்றையும் இதன்மூலம் கண்டுபிடிக்கலாம். அத்துடன் பொம்மைகளையுங்கூடத் தேடலாம்.

கணினியின் சக்தியைச் செலவழிக்கக்கூடியவாறு ஒருவரின் பொருட்களனைத்தையும் தடந்தொடர்வதற்குப் பதிலாக, இந்தத் தொகுதி பொருட்கள் நகர்த்தப்படும் செயற்பாட்டின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.

இதனால் அது ஆட்களின் நகர்வுகளைத் தடந்தொடர்ந்து பொருட்கள் மாறிய இடங்களைக் காட்டும். இதனை முன்னர் இருந்த தகவல்களுடன் ஒப்பிட்டு அதன் இடத்தைத் துல்லியமாக்கும்.

இதில் மைக்ரோசொப்ற்றின் இயக்குசக்தி கொண்ட உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் அறிவுறுத்தல்களை உங்களது Xbox இற்குக் கொடுக்கின்றது. தற்போதுள்ள அதிர்வெண் அலை அடையாளங்காணும் சிப்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைவிடவும் இது விலை குறைந்ததாகும்.

இதனால் 13 செ.மீ. அளவுள்ள சிறிய பொருட்களையும் கண்டுபிடிக்கக்கூடியது.

தற்போது இதன் பரிசோதனைக்காக வெளியிடப்பட்ட தொகுதியினால் 11அடி (3.4மீ.) தூரமே பார்க்கக்கூடியதாயுள்ளது. ஒரு பொருள் எங்கேயென்பதை இக்கருவியால் கண்டுபிடிக்கமுடியவில்லையெனினும் அது கடைசியாக எங்கே உள்ளதென்பதைக் கூறிவிடும்.

Loading...
Rates : 0
VTST BN