உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்!!

Loading...

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, உடலில் நச்சுக்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடை ஏறுவது, முகப்பரு போன்றவற்றை வெளிப்படையாக நாம் கண்டு அறிந்துக் கொள்ள முடியும். ஆனால், உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்பதை எதை வைத்து தெரிந்துக் கொள்வது?
இந்த கேள்விக்கு பதில் என்பதை விட, அறிகுறிகள் தான் நிறைய இருக்கின்றன. நமது உடலில் நல்ல மாற்றங்கள், தீய மாற்றங்கள் என்று எது நடந்தாலும் அதை சில அறிகுறிகள் மூலம் நமது உடல் நமக்கு தெரிவித்துவிடும். அதுப் போல தான், நமது உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும் போதும் கூட நமது உடலில் சில அறிகுறிகள் தென்படும்….

உடல் சூடு

உடலில் நச்சு அதிகரிக்கும் போது கல்லீரலின் செயல்பாடு கடினமாக ஆரம்பிக்கும். இதன் விளைவாக உடலில் சூடு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

கொழுப்பு நிறைந்த தொப்பை

உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்றத்தின் செயற்திறன் குறைய ஆரம்பிக்கும். இது வயிற்ரை சுற்றி கொழுப்பு சேர வைக்கிறது. இதனால் தொந்தி வர வாய்ப்புகள் உண்டு. மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பையும் அதிகரிக்க செய்கிறது.

உடல் சோர்வு

நச்சுக்கள் உங்கள் கல்லீரலில் செயல்பாட்டை கடினமாக்குவதன் காரணமாக தான் வளர்சிதை செயல்திறன் குறைகிறது. இது உடல் சோர்வு மற்றும் அவ்வப்போது மயக்கம் ஏற்படுவது போன்ற சூழலை உருவாகும். இதை வைத்து உங்களது உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகின்றன என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தலைவலி

நச்சுக்கள் மூளையில் குவிய துவங்கும் போது இது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட அளவை குறைக்க செய்கிறது. இதனால் கவனம் சிதறுதல் மற்றும் தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தூக்கமின்மை

மேலும் உடலில் நச்சுக்கள் அதிகமாகி வருகிறது என்பதை வெளிகாட்டும் ஓர் அறிகுறியாக இருப்பது தூக்கமின்மை. நச்சு அதிகரிப்பதால் இரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படலாம். இதன் காரணமாக தான் தூக்கமின்மை ஏற்படுகிறது.

சரும பிரச்சனைகள்

உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் ஏற்படும் அடுத்த கோளாறாக கருதப்படுவது சரும பிரச்சனை. அரிப்பு, பரு போன்ற சரும அழற்சிகள் ஏற்பட இந்த நச்சுக்கள் காரணமாக இருக்கின்றன.

நாக்கின் நிறம் மாறும்

உங்கள் நாக்கின் மேற்புறத்தில் மஞ்சள், வெள்ளை, கருநீலம் போன்ற நிறங்கள் தோன்றினால் உங்களது உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகின்றன என்று அர்த்தம்.

பித்தப்பை

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டும் மற்றுமொரு அறிகுறியாக இருப்பது பித்தப்பை பிரச்சனை. எனவே, இந்த அறிகுறிகளை வைத்து நீங்கள் உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்று அறிந்துக் கொள்ளலாம்.

Loading...
Rates : 0
VTST BN