ஆரஞ்சு ஜூஸ்

Loading...

ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை:
ஆரஞ்சு – இரண்டு, தண்ணீர், சர்க்கரை , ஐஸ் கட்டி – தேவையான அளவு.செய்முறை:
ஆரஞ்சுப் பழங்களை சாறு எடுத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனோடு, ஐஸ் கட்டிகள், தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் போட்டுச் சுற்றினால், ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

பலன்கள்:
ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் (Hesperetin) ஹெஸ்பிரிடின், நாரின்ஜின் (Naringin) நாரிஜெனின் (Naringenin) ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் புற்றுநோய் வருவதில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதில் உள்ள சத்துகள் பார்வைத் திறனை அதிகரிக்கவும், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.

தையமின், பைரிடோக்ஸின், ஃபோல்டேட்ஸ் ஆகியவை நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும், தொற்று வியாதிகள் பரவாமல் பாதுகாக்கும். ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இதயத் துடிப்பையும் செம்மையாக வைத்திருப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். பெக்டின் என்னும் சத்து ஆரஞ்சில் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல், குடலில் கட்டிகள் வராது.

Loading...
Rates : 0
VTST BN