ஹவாயன் சாலட்

Loading...

ஹவாயன் சாலட்
தேவையானவை:
துருவிய பனீர் – கால் கப், ஆரஞ்சு சுளைகள் – 12, வெள்ளரிக்காய், ஆப்பிள் – தலா ஒன்று, அன்னாசி பழத் துண்டுகள் – 6, முட்டைகோஸ் இலை – 4 (முட்டைகோஸை இலைகளாக பிரித்தெடுக்கவும்), வினிகர் – 2 டீஸ்பூன், எண்ணெய், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.


செய்முறை:
முட்டைகோஸ் இலைகளை சுடுநீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து வைக்கவும். ஆரஞ்சு சுளைகளை இரண்டாக நறுக்கவும். ஆப்பிளை துண்டுகளாக்கவும். வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அவற்றுடன் அன்னாசி பழத் துண்டு களையும் சேர்க்கவும். வினிகர், எண்ணெய், உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் பழக்கலவை, துருவிய பனீர் போட்டு, வினிகர் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். தட்டில் முட்டைகோஸ் இலைகளை அடுக்கி, மேலே கலவையை பரப்பி வைத்துப் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply