ஸ்லிம்மாக ஆசையா காலை உணவோடு இதை சேர்த்துக்கொள்ளுங்கள்

Loading...

ஸ்லிம்மாக ஆசையா காலை உணவோடு இதை சேர்த்துக்கொள்ளுங்கள்காலை உணவுனுடன் சேர்த்து பால் குடித்தால் உடல் ஸ்லிம்மாகும் என்று அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, காலை உணவுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும்.
இத்தகைய முறையால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைவதால் உடலின் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதில், ஆரோக்கியமான சுமார் 34 ஆண்கள் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டது.
இவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினருக்கு காலை உணவோடு சேர்த்து கொழுப்பு நீக்கப்பட்ட பாலும், மற்றொரு பிரிவினருக்கு பழச்சாறும் கொடுத்து 4 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துக்கள் இருப்பதும், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதும் தடை செய்யப்படுகிறது.
ஆனால் அதன் இதர சத்துக்கள் உடலில் சேர்ந்து மூளைச் செயல்திறனை அதிகரித்து ‘போதும் என்ற மனநிறைவைக் கொடுப்பதால் பசிக்கும் உணர்வு தள்ளிப் போகிறது, குறைவான உணவும் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது
அதனால் உடல் எடை எளிதில் குறைய இது உதவுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading...
Rates : 0
VTST BN