ஸ்மார்டாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு ஷேவிங் டிப்ஸ்

Loading...

ஸ்மார்டாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு ஷேவிங் டிப்ஸ்எப்­போதும் ஸ்மார்­டா­கவும் ஸ்டைலா­கவும் இருக்க ஆசைப்­படும் ஆண்கள் ஷேவிங்­கிலும் கவ­ன­மாக இருக்க வேண்டும்.

முறை­யான ஷேவிங் வழி­மு­றை­களை பயன்­ப­டுத்­து­வதன் மூலம் பிளேட் மூலம் ஏற்­படும் காயங்­க­ளையும், அரை குறை ஷேவிங்­கையும் தவிர்க்க முடியும்.

இங்கே படிப்­ப­டி­யாக தரப்­பட்­டி­ருக்கும் வழி­மு­றைகள் பார்ப்போம்.

* ஷேவிங் செய்­வ­தற்கு முன்னர் உங்கள் முகத்தை நன்­றாக கழு­வுங்கள்.

இதன் மூலம் வடுக்­களால் ஏற்­படும் தொற்­று­களை தவிர்க்க முடியும்.

இதன் மூலம் ஷேவிங் செய்­வ­தற்கு ஏற்ற வகையில் உங்­க­ளு­டைய தோல் மற்றும் தாடியை தயார் செய்ய முடியும்.

பின்னர் ஒரு துணியை எடுத்து நீரில் நனைத்து, அந்த துணியை தாடியில் 30 நொடி­க­ளுக்கு அப்­ப­டியே பிடித்து வைத்­தி­ருங்கள். இதன் மூலம் உங்­க­ளு­டைய முடி மற்றும் தோல் ஆகி­யவை இளகி ஷேவிங் செய்ய இல­வாக இருக்கும்.

* உள்­ளங்­கையில் தேவை­யான அளவு ஷேவிங் கிரீமை விட்டு, அதனை உங்­க­ளு­டைய கழுத்து மற்றும் தாடியில் வட்ட வடிவில் சுழற்றும் வகையில் சம­மாக பூசுங்கள்.

இதை செய்யும்போது ஷேவிங் கிரீம் சம­மான அளவில் முடி மற்றும் தோலில் படும் வகையில் செய்தால் ஷேவிங்- சரி­ச­ம­மாக இருக்கும்.

* புதிய மற்றும் பயன்­ப­டுத்­தாத பிளேட் அல்­லது நல்ல நிலையில் இருக்கும் புதிய ரேஸரை பயன்­ப­டுத்­தினால் ஆழ­மா­கவும் மற்றும் வச­தி­யா­கவும் ஷேவிங் செய்ய முடியும்.

* தாடியின் மேல் பகு­தியை ஷேவ் செய்யும் போது, தாடியின் மேல் பகு­தியில் தொடங்கி தாடை யின் முனை வரை நீள­மாக மற்றும் சம­மாக ஷேவ் செய்­யவும்.

* ஷேவிங் செய்யும்போது, கழுத்தின் கீழ் பகு­தி­யி­லி­ருந்து மேல் நோக்­கி­ய­வாறு பிளேடை அல்­லது ரேஸரை இழுத்தால், காயங்­களை தவிர்க்க முடியும், சரி­யாக அரை­குறை­யாக முடி­களை விடு­வ­தையும் தவிர்க்க முடியும்.

* உங்­க­ளு­டைய மேல் உதட்டை ஷேவிங் செய்யும் போது, அந்த பகு­தியை முன் பற்­களை நோக்கி இழுத்து விரைப்­பாக்கி விட்டு, கீழ் நோக்­கி­ய­வாறு ஷேவ் செய்ய ஆரம்­பி­யுங்கள்.

* ஒவ்­வொரு முறை ஷேவ் செய்த பின்­னரும், ரேசரை தண்­ணீரில் நன்­றாக கழுவி, அதில் தொற்றிக் கொண்­டி­ருக்கும் முடி­களை நீக்­குங்கள்.

* அதி­க­பட்­ச­மாக உள்ள ஷேவிங் கிரீமை வெந்­நீரில் கழுவி விட்டு, விட்டுப் போன முடிகள் ஏதா­வது உள்­ள­னவா என்று பார்க்­கவும். இந்த விட்டுப் போன பகு­தி­களை சுத்தம் செய்யும் முன்னர் ரேசரை தண்­ணீ ரில் கழுவி விடவும்.

* ஷேவிங்கிற்குப் பின்னர் டோனர்களை பயன்படுத்துங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply