ஸ்தம்பித்தது டுவிட்டர் சமூக வலைத்தளம்; பயனாளர்கள் கடும் அவதி

Loading...

ஸ்தம்பித்தது டுவிட்டர் சமூக வலைத்தளம்; பயனாளர்கள் கடும் அவதிமிகவும் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான டுவிட்ட‌ரின் சேவைகள் வியாழன் பிற்பகலில் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற்பகலில் முடங்கிய டுவிட்டரின் சேவைகள் அன்று முழுவதும் அப்படியே நின்று போனதால் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என எதிர்பார்த்த டுவிட்டர் பயனர்கள் ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

டுவிட்டரின் முதன்மைத் தளம் மூன்றாம் நபர் பயன்பாடுகளை சார்ந்தே இயக்கப்பட்டு வருவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இருப்பினும் செல்லிடப்பேசிகளுக்கான டுவிட்டர் இணையதளம் முடங்கவில்லை என்ற போதிலும் கூட எப்போதும் போல் அன்றைய தினம் சேவைகள் விரைவாக இல்லை எனவும் மிகவும் மெதுவாகவே செயல்பட்டதாகவும் பயனர்கள் பலர் கூறியுள்ளனர்.

தங்கள் நிறுவன கட்டமைப்பு மென்பொருள்களில் வைரஸ் பாதிப்பு ஏற்ப்பட்டதால் அது அனைத்துப் பணிகளையும் செயலிக்கச் செய்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அதன் பின்னர் தகவலை அனுப்பியுள்ளது. உலகம் முழுதிலும் 140 மில்லியன் பயனர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply