ஸிகா வைரஸ் தொடர்பில் விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கை

Loading...

ஸிகா வைரஸ் தொடர்பில் விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கைஏடிஸ் (Aedes) வகை நுளம்புகளால் பரவக்கூடிய ஸிகா வைரஸ் ஆனது அண்மைக் காலமாக பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாகக் காணப்படுகின்றது.
இவ் வைரஸிற்கான ஆரம்பகட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் முழுமையான மருத்துவமுறை ஒன்றினை அறிமுகம் செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறான ஆய்வு ஒன்றின் போது இந்த வைரஸ் ஆனது மனிதர்களில் நரம்பியல் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய Guillain-Barré எனும் நோயினை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 42 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்தே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது தொடர்பாக பெரிதளவில் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply