வெள்ளரிக்காய் கோஸ்மல்லி

Loading...

வெள்ளரிக்காய் கோஸ்மல்லி
தேவையானவை:
வெள்ளரிக்காய் – 1, பாசிப்பருப்பு – ஒரு கப், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, கடுகு, எண்ணெய் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – பாதி, எலுமிச்சைப் பழச்சாறு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெள்ளரிக்காயைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை ஊறவைத்து வடிகட்டவும். வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சைச் சாற்றை விடவும். எண்ணெயில், கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டு, தாளித்துக் கலக்கவும்.

குறிப்பு:
தாகத்தைத் தணிக்கக்கூடிய காய்களில், வெள்ளரியும் ஒன்று. பச்சையாகச் சாப்பிடலாம். மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். தயிர்ப்பச்சடி தயாரிக்கலாம்.

பலன்கள்:
100 கிராம் வெள்ளரியில் 15 கலோரி மட்டுமே கிடைக்கும். எனவே, குண்டாக இருப்பவர்கள், எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். நார்ச்சத்து, நீர்ச்சத்து, தாது உப்புக்கள் இதில் அதிகம். குளிர்ச்சி தரக்கூடியது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply