வெனிலா ஐஸ்க்ரீம்

Loading...

வெனிலா ஐஸ்க்ரீம்
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு – 4 டீஸ்பூன், சர்க்கரை – 150 கிராம் (அல்லது விருப்பத்துக்கேற்ப).


செய்முறை:
பாலை சுடவைத்து, பொங்கி வரும்போது 100 மில்லி அளவு எடுத்து, ஆற வைத்து ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு போட்டு கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள பால் பாதியளவு குறுகுமாறு நன்கு காய்ச்சி… சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் பவுடர் – பால் கலவையை சேர்த்து, நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். அப்படியே ஆறவிடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு 10 நிமிடம் அடிக்கவும். அடித்த கலவையை அலுமினியம் பாத்திரத்தில் விட்டு, வெனிலா எசன்ஸ் கலந்து ஃப்ரீசரில் வைத்து குளிரவிடவும் (குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஸ்விட்சை ‘கூலிங் ஹை’யில் வைக்கவும்). 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு கப்பில் வைத்து, ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply