வெண்டைக்காய் வெல்லப் பச்சடி

Loading...

வெண்டைக்காய் வெல்லப் பச்சடி
தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ, வெல்லம் – 50 கிராம், வேர்க்கடலை – 50 கிராம். தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி சிறியதாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பொரித்த வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு, கரைந்ததும் மண் இல்லாமல் வடிகட்டி, வெண்டைக்காயில் ஊற்றி, நன்கு கிளறவும். வேர்க்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:
குழந்தைகளின் மூளைத் திறன் மேம்படும். ரத்தசோகை, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை நீங்கும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறந்த உணவு. பால் அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சிறந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply