வெகுநேரம் நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்?

Loading...

வெகுநேரம் நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்ஜப்பானில் ஆர்ச்சிலிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ள இந்த நாற்காலி வெகுநேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். கணிணியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே இந்த நாற்காலி உகந்த ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த நாற்காலி ஒரு அணிந்து கொள்ளக்கூடிய உடை போன்று உள்ளது. இதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக மாற்றி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்ச்சிலிஸ் நிறுவனம் இந்த அணியும் சாதனத்தினை வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சோர்வடையாமல் அவர்களது வேலையைச் செய்யவதற்காக தயாரித்துள்ளது. இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம். மேலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல் பொருள் அங்காடி ஊழியர்கள் , தயாரிப்பு துறையில் நின்று கொண்டே பணி புரிபவர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பொறியாளர்கள் , நூலக உதவியாளர்கள், சிகையலங்காரம் செய்பவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்பத்தில் ஈடுபடுவோர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும். இதன் வழியே வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும் தடுக்கலாம். யார் கண்டால் எதிர்காலத்தில் அணிந்து கொள்ளக் கூடிய படுக்கைகள் (Wearable Bed) கூட கண்டுபிடிக்கப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply