விலை குறைந்தது சோனி நிறுவனத்தின் பிலே ஸ்டேஷன் 3!

Loading...

விலை குறைந்தது சோனி நிறுவனத்தின் பிலே ஸ்டேஷன் 3!பொருளாதாரம் உலக நாடுகள் எலாவற்றிலும் பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. இதன் காரணமாக கணினி மற்றும் கணினி சார்ந்த பொருட்கள் அதாவது வீடியோ கேம் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது.

இதனையடுத்து ஜப்பான் நிறுவனம் சோனி தனது தயாரிப்பான பிலே ஸ்டேஷன் 3இன் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது.

டோக்கியோவில் பிலே ஸ்டேஷன் 3 வீடியோ கேமின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்ட சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன்மென்ட் தலைவர், இந்த புதிய பதிப்பு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ஜப்பானில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.

தற்போது புழக்கத்தில் உள்ள பிலே ஸ்டேஷன் 3 வீடியோ கேம் 80 ஜிகா பைட் மெமரி கொண்டது. ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிலே ஸ்டேஷன் 3ல் 120 ஜிகா பைட் மெமரி உள்ளது.

இதுமட்டுமின்றி பிலே ஸ்டேஷன் 3 வீடியோ கேமின் தற்போதையை விலையை 100 டாலர்கள் வரை குறைத்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்கப்படும் பிலே ஸ்டேஷன் 3, இனி 299 டாலர்களுக்கும், ஐரோப்பாவில் 399 யூரோவில் இருந்து 299 யூரோவாகவும் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply