விபத்துக்குள்ளானது கூகுளின் தானியங்கி கார்

Loading...

விபத்துக்குள்ளானது கூகுளின் தானியங்கி கார்சாரதி இன்றி தாமாகவே சாலைகளில் பயணம் செய்யக்கூடிய கார்களை கூகுள் உட்பட மேலும் சில நிறுவனங்கள் வடிவமைத்துவருகின்றமை தெரிந்ததே.
இவற்றுள் கூகுள் நிறுவனம் வடிவமைப்பு பணிகளை பூர்த்தி செய்து தற்போது பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆரம்ப கட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ள போதிலும் 12 தடைவைகளுக்கு மேல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந் நிலையில் தற்போது குறித்த கார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த மாதம் காதலர் தினத்தன்று இடம்பெற்ற இவ் விபத்தின்போது காரானது மணிக்கு 2 மைல் வேகத்திலும், பஸ் ஆனது மணிக்கு 15 மைல் வேகத்திலும் தடம்புரண்டுள்ளது.

எனினும் இதன்போது எவரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply