வாழைப்பூ பஜ்ஜி

Loading...

வாழைப்பூ பஜ்ஜி
தேவையானவை:
ஆய்ந்த வாழைப்பூ – ஒரு கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. அரைக்க: கடலைப்பருப்பு – கால் கப், அரிசி – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – ருசிக்கேற்ப.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் பருப்பையும் அரிசியையும் ஊறவைத்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைப்பூவை ஒவ்வொன்றாக எடுத்து, அரைத்த மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
இந்த வாழைப்பூ பஜ்ஜியைப் போட்டுக் குழம்பும் செய்யலாம். சுவையாக இருக்கும்.

பலன்கள்:
வயிற்றுக்குத் தொந்தரவு தராத, கொறிக்கும் உணவு. சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும். குடல் பலப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply