வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு

Loading...

வறண்ட சருமத்திற்கான பராமரிப்புவறண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீங்கி முகம் பொலிவடையும். ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறையும்.

பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோல் வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மாறும்.

2 தேக்கரண்டி அரைத்த தேங்காய், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர எண்ணெய்ப் பசை சமநிலைப்படுத்துவதோடு, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழு�வினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

சூடாக்கிய செய்த ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மாத்திரை 2, வைட்டமின் ஏ மாத்திரை 1, வைட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்னர் 15 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்னர் பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

தலையின் வறட்டு தன்மையை போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது. ஆரஞ்சு தோல் உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைபருப்பு, பயத்தம்பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளியுங்கள் இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்கு தேய்த்து குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.


கண்கள் பளிச்சிட

கண்கள் பளிச் ஆக ஆரஞ்சு பழச்சாரை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளை துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply