வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய

Loading...

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்யஎண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
கற்றாழை கற்றாழை உதடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் சிறந்தது என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை இருப்பதால், அவற்றை உதடுகளுக்குப் பயன்படுத்தும் போது, உதடுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். மேலும் இதன் ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், அவை வறட்சியைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையடையவும் செய்யும்.
தேன் தேனில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இந்த தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். வேண்டுமானால் பகலில் கூட பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply