வர வர உடலுறவில் ஈடுபட தோன்றுவதில்லையா அப்ப இது காரணமா இருக்குமோ

Loading...

வர வர உடலுறவில் ஈடுபட தோன்றுவதில்லையா அப்ப இது காரணமா இருக்குமோதற்போது நிறைய பேருக்கு படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு இன்றைய காலத்தில் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். அதிலும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் இருப்பது, பாலியல் ஆரோக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
ஒருவருக்கு உடலில் நாள் கணக்கில் பிரச்சனைகள் இருந்தால், படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். இப்படி பாலியல் உறவில் பிரச்சனைகளை சந்தித்தால், பின் தம்பதியருக்கிடையே சண்டைகள் தான் அதிகரிக்கும்.
எனவே ஒவ்வொருவரும் முதலில் தங்களது உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இங்கு உடலுறவின் மீதுள்ள நாட்டத்தை அழிக்கும் உடல் நல பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இரத்த சோகை

இரத்த சோகைக்கும், பாலியல் வாழ்க்கைக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், உடல் பலவீனமடைந்து, அதனால் பாலியல் உணர்ச்சி குறைந்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இரத்த சோகை இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கவனித்து வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன் போதிய சிகிக்கை எடுத்து வந்தால், சரிசெய்துவிடலாம்.

முதுகு வலி

இன்றைய இளம் தலைமுறையினர் நீண்ட நேரம் அமர்ந்தவாறே வேலை செய்வதோடு, தவறான நிலையில் நீண்ட நேரம் இருப்பதால், தண்டுவடம் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான முதுகு வலியை சந்திக்க நேரிடுகிறது. முதுகில் வலியை அதிகம் சந்திந்தால், பாலியல் உணர்வு குறையும். மேலும் ஆய்வுகளிலும் 61% மக்கள் முதுகு வலியால் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே சிறிது முதுகு வலி இருந்தாலும், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயலுங்கள்.

மன இறுக்கம்

மனநிலை நன்கு சந்தோஷமாக இருந்தால் தான் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும். அதைவிட்டு எப்போதும் மன அழுத்தத்துடனும், இறுக்கத்துடனும் இருந்தால், அதன் காரணமாக பல பாலியல் குறைபாடுகளை சந்திக்க நேரிடும். எனவே உங்களுக்கு மனநிலை சரியில்லை என்றால், மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுங்கள்.

மாதவிடாய் நிறுத்தம்

தற்போது பெண்களுக்கு 35 வயதிலிருந்தே மாதவிடாய் சுழற்சி நின்றுவிட ஆரம்பிக்கிறது. பொதுவாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருவாயில், மனநிலையில் பல மாற்றங்களுடன் கோபம், வெறுப்பு போன்றவை இருக்கும். இந்நேரத்தில் பெண்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் இருக்காது. ஆனால் இதனை பெண்கள் சரியான கவுன்சிலிங் மேற்கொண்டு தடுக்கலாம்.

நீரிழிவு

உயர் இரத்த சர்க்கரை அளவும் பல்வேறு பாலியல் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அதில் நீரிழிவு நோயால் 60-70 சதவீத ஆண்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பதும் தெரிய வந்தது. ஏனெனில் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை ஆணுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துகிறதாம்.

ரத்த நாள நோய்கள்

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் விறைப்புத்தன்மை முக்கிய காரணியாக உள்ளது. எனவே ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அதனால் பாலியல் பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்கக்கூடும். ஆகவே ஆண்களுக்கு இரத்த நாளங்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம், தமனி தடிப்பு போன்றவை இருந்தால், அவர்களது ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படும். அதில் இப்பிரச்சனைகள் ஆண்களுக்கு இருந்தால் விறைப்புத்தன்மை குறைபாடும், பெண்களுக்கு என்றால் போதிய ஈரத்தன்மை இல்லாமலும் இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply