வரகரிசி இட்லி உப்புமா

Loading...

வரகரிசி இட்லி உப்புமா
தேவையானவை:
வரகரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப) பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வரகரிசி, துவரம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாயை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து, உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, வேகவைத்து உதிர்த்த இட்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கி, கறிவேப்பிலையை தூவவும். சூப்பர் சுவையில் ஈவினிங் டிபன் தயார்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply