வந்துவிட்டது…வி எக்ஸ்டி-889 மோட்டோ ஸ்மார்ட்போன்!

Loading...

வந்துவிட்டது…வி எக்ஸ்டி-889 மோட்டோ ஸ்மார்ட்போன்!புதிய தொழில் நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வந்துவிட்டது மோட்டோரோலா ரேசர் வி எக்ஸ்டி-889 ஸ்மார்ட்போன். இது வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என்று கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை தொழில் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் பிரம்மாண்டமான திரையில், எந்த தகவல்களையும் புகைப்படங்களையும் சிறப்பாக பார்க்கலாம். இதில் சிறந்த 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும், புகைப்படங்களையும் பெறலாம்.

இந்த மோட்டோரலா ரேசர் வி எக்ஸ்டி-889 ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. மியூசிக் போன்ற தொழில் நுட்ப வசதியினை பெற இதில் பிரத்தியேகமாக பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பட்டனை அழுத்தினால் போதும் இசை உலகத்திற்குள் சென்றுவிடலாம்.

சீனாவில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாவது பற்றி இன்னும் வேரெந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா? என்பது பற்றியும் இதன் விலை விவரத்தினை பற்றியும், கூடிய விரைவில் தகவல்கள் வெளியாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply