வஞ்சிரம் கருவாடு தொக்கு

Loading...

வஞ்சிரம் கருவாடு தொக்கு
தேவையான பொருள்கள்

வஞ்சிரம் கருவாடு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
நல்லெண’ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


செய்முறை

கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி தேவையான உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள கருவாடு போட்டு வதக்கி 1 டம்ளர் தணணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply