லைஃப்பை ஸ்டைலாக்க வருகிறது புதிய பிஜிட்சூ நோட்புக்…

Loading...

லைஃப்பை ஸ்டைலாக்க வருகிறது புதிய பிஜிட்சூ நோட்புக்…சமீபமாக நிறைய நிறுவனங்கள் இன்டெல் பிராசஸர் கொண்ட லேப்டாப்களை வெளியிட்டு வருகின்றனர். பிஜிட்சூ நிறுவனம் லைஃப்புக் எஸ்எச்-531 என்ற புதிய நோட்புக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நோட்புக் 13.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். கண்ணை கூச செய்யும் வெளிச்சத்தினை தவிர்க்கும் வகையில் இதில் ஏன்டி-கிளேர் எல்சிடி திரையினை கொண்ட இந்த நோட்புக் 1.9 கிராம் எடையினை கொண்டது.

இன்டெல் கோர் ஐ5 பிராசஸரை கொண்ட இந்த லேப்டாப் 1.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவினையும் கொடுக்கும். டைப் செய்வதற்கு நிகவும் சவுகரியமாக இருக்கும் வகையில் இதன் கீபோர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்புக் பற்றிய அதிகமான தொழில் நுட்ப விவரங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இந்த பிஜிட்சூ நோட்புக் ரூ.45,000 விலை கொண்டது. விலை அதிகமாக இருப்பினும், நோட்புக் என்கிற போது இது சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply