லெமன் ரைஸ் லெமன் சேவை

Loading...

லெமன் ரைஸ்  லெமன் சேவை
தேவையானவை:
லெமன் சால்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 6, பச்சை மிளகாய் துண்டுகள் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை – இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்… லெமன் ரைஸ் – லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.
லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply