ரோஸ் மில்க்

Loading...

ரோஸ் மில்க்
தேவையானவை:

பால் – கால் லிட்டர்
சீனி – கால் கப்
ரோஸ் மில்க் எசன்ஸ் – கால் தேக்கரண்டி
ஊற வைத்த பாதாம் பிஸின் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றவும்.
பிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிஸினை போட்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான ரோஸ் மில்க் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply