ரோஜா இதழ்கள் போன்ற அழகான உதடுகளுக்கு

Loading...

ரோஜா இதழ்கள் போன்ற அழகான உதடுகளுக்குபெண்களின் முக அழகுக்கு உதடுகளின் வசீகிரம், அதனுள் பொதிந்து கிடக்கும் பற்களின் `பளிச்’ வெண்மை ஆகியவை தான் காரணம் அத்தகைய பெருமைக்குக் காரணமான உதட்டை பேணிக்காக்க வேண்டாமா? ரோஜா இதழ்கள் போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் உதடுகளில் கருமை, பிளவு, ஓரங்களில் புண், ரத்தக்கசிவு என்று அவ்வப்போது ஏதாவது ஒன்று ஏற்பட்டு, நம்மை வருத்தப்பட வைத்துவிடும்.

காற்றிலுள்ள ரசாயன புகை மற்றும் தூசுக்கள் காரணமாக, உதடுகளில் உள்ள ஈரப்பசை முற்றிலும் காணாமல் போய்விடும். சிலருக்கு உதட்டை அடிக்கடிக் கடிப்பதும், நாக்கினால் ஈரப்படுத்திக் கொள்வதும் ஒரு பழக்கமாகவே இருக்கும்.

இது மிகவும், ஆபத்தான பழக்கமாகும். உதட்டின் மீது பற்கள் படும் இடத்தில் அதன் நிறமே மாறி வெண் குஷ்டம்’ ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். அதோடு, உதட்டுக்கே உரிய மிருதுத்தன்மையும் பறிபோய் வறண்டு விடும்.

இதில் இருந்தெல்லாம் தப்பிக்க, உதடுகளின் மீது தினமும் தனி கவனம் செலுத்துவது நல்லது. முக்கியமாக, உணவில் பால், தயிர் வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உலர் திராட்சை சாறு, பீட்ரூட் சாறு, தேன் இவற்றை தினமும் மாறி மாறி பஞ்சினால் தோய்த்து பூசுவதாலும், உதட்டின் வறட்சி நீங்கி, பளப்பளப்பும் நல்ல கலரும் தோன்றும்.

* வைட்டமின் பி சத்துக் குறைவினால் வாயில் புண், உதடுகள் வெடித்துப்போதல், உதட்டின் இரு ஓரங்களிலும் வெள்ளைப் புண்கள் தோன்றுவது போன்ற உபாதைகள் ஏற்படும், இதற்கு, கசகசாவை வறுத்துப் பொடி செய்து, அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 100 மில்லி பாலில் கலந்து தினமும் குடிக்கலாம் அல்லது கசகசாவை வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து, அந்தப் பாலை ப்ரிட்ஜில் குளிரவைத்து உதடுகளுக்குத் தடவி வந்தாலும் புண் ஆறிவிடும்.

* மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், வயிற்றில் புண் ஏற்பட்டு, வாய், உதடுகளிலும் புண்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு… இஞ்சி சாறு, தேன், உலர் திராட்சை சாறு இவற்றை தலா இரண்டு டீஸ்பூன் தினமும் சாப்பிட்டு வந்தால், வெடிப்பு, வறட்சி, புண்கள் எல்லாம் மறைந்து விடும். உதடுகள் பஞ்சுபோல் மெத்தென அழகாக மாறும்.

* உதட்டுப் புண்ணுக்கு, மருந்து மாத்திரை களைவிட வெண்ணெய், நெய், சப்போட்டா, ஆரஞ்சு, பசலைக்கீரை என்று சேர்த்துக் கொண்டாலோ போதும். உடலும் உதடும் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்.

* ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து உதடுகளின் மேல், கீழ், உட்புறம் எல்லாவற்றிலும் நன்றாக பஞ்சால் ஒற்றி எடுக்கவும். அப்போது, உதட்டில் தோன்றும் வரிகள் மறைவதோடு சிறிய உதடு சற்று நீண்டும் காணப்படும்.

* கடுகு எண்ணெய் தோய்த்த பஞ்சை உதடுகளின் மேல் அப்படியே வைத்து விட்டு 10 நிமிடத்துக்குப்பின் எடுக்கும் போது, உதடுகள் பிளவு மற்றும் நிறம் மாறி இருத்தல் மறையும். பளபளப்பையும் கொடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply