ரிப்பன் பக்கோடா

Loading...

ரிப்பன் பக்கோடா

தேவையானவை:
அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.

ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply