ரஸமலாய்

Loading...

ரஸமலாய்
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், பனீர் – 100 கிராம், சர்க்கரை – முக்கால் கப், குங்குமப்பூ – 4 இதழ்கள், சீவிய பாதாம் – பிஸ்தா – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதா – 2 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை பாத்திரத்தில் விட்டு பாதியாகும் வரை காய்ச்சி… அரை கப் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் சூடாக இருக்கும்போதே ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் மைதா கலந்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்யவும்.
குக்கரில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு, கால் கப் அளவு சர்க்கரை போட்டு கரையவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். குக்கரை மூடி, 2 விசில் வந்த பிறகு இறக்கவும். பிரெஷர் போனதும் உருண்டைகளை எடுத்து லேசாக அழுத்தினால் தண்ணீர் வடியும். இந்த உருண்டைகளை காய்ச்சி வைத்திருக்கும் பால் கலவையில் சேர்த்து, சீவிய பாதாம் – பிஸ்தாவை மேலாக தூவினால்… ரஸமலாய் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply