ரவா இட்லி

Loading...

ரவா இட்லி
தேவையானவை:
ரவை – ஒரு கப், லெமன் சால்ட் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 5, மிளகாய் வற்றல் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.
ரவா இட்லி தேவைப்படும்போது… தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply